Monday, February 7, 2011

ஏமாறுதல் அல்லது ஏமாற்றபடுதல்!!!

சமீபகாலமாக தமிழ்நாட்டில் ஹாட் டாபிக் மல்டி லெவல் மார்கெட்டிங்.
மாபெரும் டுபாக்குரான இந்த தொழிலுக்கு இன்னும் சில பேர் சப்பை கட்டு கட்டுவதை பார்த்தால் பாவமாக இருக்கிறது.

சிறு வயதிலிருந்தே எனக்கு வாய் அதிகம் என்பதால், இவனுக்கு வாய் இல்லைன்னா நாய் தூக்கிட்டு போயிரும் என்று சொல்லுவார்கள். இத்தனை சாதகமாக்கி கொள்ள சில நண்பர்கள் உனக்காக பணம் கட்டுகிறோம். நீ வொர்க் பண்ணு சம்பாரிப்பதில் ஆளுக்கு பாதி என்று சொன்னார்கள், என்ன கான்செப்ட் என்று கேட்டவுடன் சொல்லிவிட்டேன்
இது மல்டி லெவல் மார்கெட்டிங் அல்ல
மல்டி லெவல் சீட்டிங் என்று,

சன் டிவீயில் சிறந்த பத்து படங்களை வரிசை படுத்தும் போது, பத்தாவது இடத்தில் இருக்கும் படத்தை பற்றி சொல்லுவார்கள், "இந்த படத்தை பற்றி தேவையான அளவு அலசி விட்டதால் அடுத்த படத்திற்கு செல்லுவோம்" என்று, இந்த பதிவும் அது போல தான், மல்டி லெவல் மார்கெட்டிங் பற்றி தேவையான அளவு அனைவரும் அலசி விட்டதால், மக்கள் வேறு எத்தனை விதமாக ஏமாறுகிறார்கள் என்று அலசுவோம்,

பத்தாவது இடத்தில் மல்டி லெவல் மார்கெட்டிங்

ஒன்பதாவது இடத்தில் பணத்தை பெருக்குதல் அதாவது ஒன்றுக்கு இரண்டு என்ற முறையில் கள்ள நோட்டு மாற்றுதல், முதலில் நல்ல நோட்டை கொடுத்து வெளியே கொடுத்து பார் யாருக்காவது சந்தேகம் வந்தால் உன் முன்னாடியே நாக்கை புடிங்கிட்டு சாகிறேன்!? என்பான், அவனும் ஏமாந்து பணத்தை கொடுத்து வெள்ளை பேப்பரை வாங்கி வருவான்,இது ஒரு பெரிய நெட்வொர்க்காக செயல் படுவது இவர்களின் சிறப்பு

எட்டாவது இடத்தில் இரும்பை தங்கமாக்குதல் இடம் பெறுகின்றது, ரசவாதம் என்று அழைக்கப்படும் இந்த மோசடி இன்றும் வெளிநாட்டில் கூட சில விஞ்ஞானிகளால் முயற்சி செய்து பார்க்கபடுகிறது. இதற்காக ஒரு கிலோ இரும்பும் வீட்டில் இருக்கும் தங்கத்தையும் கொடுங்கள் என்று வாங்கி கொண்டு பதிலுக்கு அல்வா கொடுத்தல் இவர்களின் சிறப்பு.

ஏழாவது இடத்தில் சாமியாடி குறி சொல்லுதல்,மற்றும் போயோட்டுதல் ஒரு பைசா "முதல்" தேவையில்லை,
இரண்டு கையிலும் வேப்பில்லை கொஞ்சம் சாம்பல் பவுடர் (அதாங்க விபூதி) இருந்தால் போதும், ஆத்தா டைரக்டா வந்து உங்கள் குறைகளை தீர்த்து வைப்பாள், பூஜை செய்யும் போது பணம், நகை மற்றும் கோழி, ஆடு, சில இடங்களில் நிர்வாணமாக பெண், அந்த பெண்ணின் கற்பு பறி போகும் வாய்ப்பு நிறைய உண்டு.

ஆறாவது இடத்திலும் இதே சாமியார்கள், ஆனால் இவர்களுக்கு செலவு உண்டு,
ஆசிரமம் என்ற பெயரில் ஒரு இடத்தை வளைத்து போட்டு பகலிலே பஜனை இரவிலே கும்மாளம் என்று பொழுது போகும், வாயிலிருந்து லிங்கம் எடுத்தல், (லிங்கம்னா "அது" தானே,அது எப்படி வாய்க்குள்ள போச்சு) காற்றில் மோதிரம் வரவழைத்தல் போன்ற சித்து விளையாட்டுகள் பகலிலும், சில சாமியார்கள் பெண்களையும், சில சாமியார்கள் ஆண்களையும்!? பாலியல் தொந்தரவு செய்தல் இரவிலும் நடக்கும்.

ஐந்தாவது இடத்தில் ஜோதிடம் பார்த்து பரிகாரம் சொல்லுதல்,
இதை ஒரு கணிதம் என்று சொல்லும் ஜோதிட சிகாமணிகள் இன்னும் பிட்சை எடுத்து கொண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை? ராகு பாக்குறான், கேது கேக்குறான்னு சொல்லி, பத்து அந்தணர்களுக்கு உணவளிக்கணும், பசு தானம் செய்யணும்-இப்படி நிறைய, ஆனா நீங்க அலைய வேண்டாம் காசு கொடுத்துருங்க நாங்களே பண்ணிருவோம்ன்னு கடுக்கா கொடுத்தல் இவர்களின் சிறப்பு!

நான்காவது இடத்தில் சூனியம் வைத்தல், பெரிதாக வேலையில்லை ஆனால் ஓம். கிலீம், க்ரீம் என்று சவுண்டு கொடுக்கவேண்டும், அடுத்தவர்களை கெடுத்து நாம் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைக்கும் சோம்பேறி நாய்களிடமிருந்து பணம் பிடுங்கம் நல்ல பணியை இவர்கள் செய்கிறார்கள்.

மூன்றாவது இடத்தில் சூனியம் எடுத்தல், இவர்களுக்கும் பெரிதாக வேலையில்லை ஆனால் கடப்பாரையை எடுத்து "அங்கே ஓடுது குத்து, இங்கே ஓடுது குத்து" என்று சவுண்டு கொடுக்க வேண்டும், யாரும் வைக்காத, வைக்கவும் முடியாத சூனியத்தை
கட்டம் வரைந்த தகடு அல்லது கோழி தலை போன்று மறைதிருந்து எடுப்பது இவர்களின் சிறப்பு.

இரண்டாவது இடத்தில் இருப்பது அரசியல்வாதிகள், பொய் சொல்லி ஏமாற்றி ஒட்டு கேட்பது இவர்களின் முதல் வேலை, வாக்குறுதி என்ற பெயரில் மக்களை நம்ப வைத்து பதவிக்கு வந்தவுடன் ஊரையே விலைக்கு வாங்குவது இவர்களின் சிறப்பு, எத்தனை முறை ஏமாற்றினாலும் மக்கள் மீண்டும் மீண்டும் இவர்களிடம் ஏமாறுவது இவர்களின் தனிச்சிறப்பு.

முதல் இடத்தில் இருப்பது புதையல் எடுத்து தரும் சாமியார்கள், இவர்கள் முதல் இடத்தில் இருக்க காரணம், மற்றவர்களாவது பொருள்களை மட்டும் அடித்து சென்றனர்,
இவர்கள் பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க சொல்வது கொடுமை, அதைவிட கொடுமை இவர்களும் அதை செய்வது

நெஞ்சு பொறுக்குதில்லையே கண்ணம்மா
இந்த நிலை கெட்ட மானிடரை நினைத்திடும் பொழுது

புரியாத புரிதலை புரிந்து கொள்ள சில முயற்சிகள்!!

இன்று நாடெங்கும் காட்டுதீ போல் பேசப்படும் பிரச்சனை விலைவாசி உயர்வு!
இதற்கு காரணம் ஆன்லைன் வர்த்தகம் என்று குற்றம் சாட்டபடுகிறது.
இதை புரிந்து கொண்டு தான் சொல்கிறார்களா அல்லது யாரோ விசமி கிளப்பி விட்ட வதந்தியா என்று தெரியவில்லை,

ஆன்லைன் வர்த்தகம் மட்டுமே ஒரு காரணமல்ல என்பதற்காகவே இந்த பதிவு.

ஒரு நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பணத்திர்கேர்ப்ப தங்கம் கையிருப்பு இருக்க வேண்டும் என்பது நியதி, அதை மாற்றியது முதல் குற்றம், மற்ற மாநிலங்களை சாட்சிக்கு கூப்பிடுவதை விட நம் தமிழகத்தை பற்றியே பேசுவோம்.

நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வருடம் மட்டுமல்லா எப்போதுமே துண்டு விழாத பட்ஜெட் நம் இந்தியாவில் கிடையாது.
முதல் முட்டாள் தனம் இலவச தொலைகாட்சி பெட்டி, அதை அவர்கள் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும், எங்கிருந்து வரும் காசு,

இரண்டு ரூபாய்க்கு அரிசி உண்மையில் ஏழைகளை சென்றடைகிறதா!?
இட்லி மாவு விற்கும் கடைகளுக்கும், ஓட்டல்களுக்கும் தான் சப்ளை ஆகிறது,
ரேசன் கடைகளில் நேர்மையாக தான் நடந்து கொள்கிறார்கள், எதாவது வாங்க சென்றால்
அவர்கள் கேட்பது
அரிசி வாங்குவீர்களா ?
இல்லை
இருபது கிலோ போட்டு கொள்ளட்டுமா
நாம் தான் வாங்க போவதில்லையே
சரி போட்டு கொள்ளுங்கள் என்கிறோம், அதே போல் ஐந்து பேரிடம் கேட்டால் ஒரு மூட்டை ஆகி விட்டது, அதை தான் விற்கிறார்கள்.

விவசாயகடன் ரத்து, சரி வங்கிகளுக்கு யார் பணம் குடுப்பார்கள்,
இப்படி பேப்பரை பண நோட்டாக அச்சடித்து அதை வேற்று காகிதமாக்கியது யார்?
இந்த கூறு கெட்ட அரசாங்கம் தான்! எனக்கு எந்த அரசியல்வாதிகள் மேலும் நம்பிக்கையில்லை, தன் பாக்கெட்டை நிரப்பவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

ரேசன் கார்டு வைத்திருப்பவர் அனைவருக்கும் இலவச தொலைகாட்சி பெட்டி என்று ஸ்டாலின் அறிக்கை விடுகிறார், நம் கட்டும் வரிப்பணம் இப்படி நாசமாய் போனால் ஏன் வராது இந்த விலைவாசி உயர்வு.

இவர்கள் இஷ்டத்திற்கு நோட்டு அடிப்பதற்கும், வெளியே ஒருவன் கள்ளநோட்டு அடிப்பதற்கும் என்ன வித்தியாசம்,

ஆன்லைன் வர்த்தகத்தை மட்டும் குறை சொல்வது தவறு, அது எல்லா நாட்டிலும் இருக்கிறது, ஆனால் நம் நாட்டில் இருப்பது போல் இந்த அளவு அசுர விலைவாசி உயர்வு எங்கேயும் இல்லை.


அதே நிலம், அதே விவசாயி, அதே பயிர்கள் ஆனால் பத்து வருடத்திற்கு முன் இருந்ததை விட பத்து மடங்கு விலை உயர்வு, மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்து விட்டதால் இந்த உயர்வு என்று அறிக்கை விடுகிறார்கள், விட்டால் பட்டினி கிடக்க சொல்லுவார்கள்,

பிரச்சினையின் வேரை விட்டுவிட்டு கிளையை பிடித்து தொங்குவது தான் இந்த அரசியல்வாதிகளின் வேலை. விலைவாசி உயர்வுக்கு அவர்கள் சொல்லும் காரணம் துளியும் உண்மையில்லை, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவச தொலைகாட்சி தருகிறார்களாம், இலவசமாய் இந்த பெட்டி கிடைக்கும் அரிசி கிலோ நூறு ரூபாய்க்கு விற்கும்

படித்ததில் பிடித்தது!

பக்கம் இண்ட்டு பக்கம்
சதுரத்தின் பரப்பளவு,
வெட்கம் இண்ட்டு வெட்கம்
என் தேவதையின் முகத்தழகு



உன் விரலசைவில்
என் உலகனைத்தும் உறையும்,
உன் கண்ணசைவில்
என் கனவனைத்தும் தொடங்கும்
உன் உதட்டசைவில்
என் உயிர் முழுதும் உருகும்



பெருவெளி ஒளியில்
அநாதையாய் நான்,
கண்ணெட்டும் தூரம் வரை ஒளி
அதன் பின்னும்,
கடைசி சொட்டு ரத்தம் வரை
கண்ணீராக்கும் மனசு,
கடைசி துளி எண்ணம் வரை
உன் பெயர் சொல்லும் கனவு,
குறையாய் விட்ட சிலையாய் நான்,

Tuesday, February 1, 2011

கவிதை


தேடி சோறு நிதம் தின்று பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி மானம்வாடி
துன்பம் மிக உலான்ற்று பிறர்வாழ
பல செயல்கள் செய்து நரைகூடி
கிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்கு
இரையென மாயும்பல வேடிக்கை
மனிதரை போல நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?


அம்மா வயிற்றில் சுமந்தால் !
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பன் உன்னை சுமக்கவில்லை ஏனெனில்
நட்பு ஒரு சுமையல்ல ........
நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது ...

நீ விழித்திருப்பாய் என்ற நம்பிக்கையில்
நான் நிம்மதியாக உறங்கப் போகிறேன்
இதயத்தைப் பார்த்து  இமைகள் சொன்னது
குட் நைட்

துடிக்கும் போது யாரும் கவனிக்க மாட்டார்கள்
ஆனால் நின்று விட்டால் !
அனைவரும் துடிப்பார்கள் ....
எதற்காக எந்த துடிப்பு ?

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை
நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விடதோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது

இரவெல்லாம் விடியாமல் நீண்டுகொண்டே இருக்கிறது
நாளை உன்னை பார்க்கத் துடிக்கும் என் மனதின்
வேதனை அறியாமல் !
விடிவது முக்கியம் அல்ல உன் விழிகளில் விழுவதே முக்கியம்


நட்பு என்பது சூரியன் போல் எல்லா நாளும் பூரணமாய் இருக்கும் !
நட்பு என்பது கடல் அலை போல் என்றும் ஓயாமல் அலைந்து வரும்

நட்பு என்பது அக்னி போல் எல்லா மாசுகளையும் அழித்துவிடும் !
நட்பு என்பது தண்ணீர் போல் எதில் ஊற்றினாலும் ஒரே மட்டமாய் !
நட்பு என்பது நிலம் போல் எல்லாவற்றையும் தாங்கி கொள்ளும் !
நட்பு என்பது காற்றைப் போல் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும்

Thanks to tamil25.com